search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈஸ்டர் பண்டிகை"

    இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளதாக செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. #Easterattacks #SriLankaBlasts
    கொழும்பு:

    இலங்கையில் கடந்த மாதம் 21-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், ஓட்டல்கள் உள்ளிட்ட இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு தாக்குதல்கள் நடந்தன. இதில் 250-க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 500-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.

    இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் பரிதாப நிலை குறித்து கொழும்பை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இலங்கை செஞ்சிலுவை சங்கம் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-



    தொடர் குண்டுவெடிப்பால் 200 குழந்தைகள், தங்கள் குடும்ப உறுப்பினர்களை இழந்துள்ளனர். சில குடும்பங்கள், தங்கள் வருவாய் ஆதாரத்தை இழந்துவிட்டன. அவர்களுக்கு போதிய சேமிப்பும் இல்லாததால், அன்றாட வாழ்க்கை நடத்தவே சிரமப்படுகின்றனர்.

    குண்டுவெடிப்பில் காயம் அடைந்த பலர் வேலைக்கு செல்ல முடியாத நிலையில் உள்ளனர். சிலர் வேலை செய்யும் திறனை இழந்துவிட்டனர். குடும்ப உறுப்பினர்கள் காயம் அடைந்ததால், 75 குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.

    குண்டுவெடிப்பில் உயிர் பிழைத்தவர்கள், நேரில் பார்த்தவர்கள், குடும்ப உறுப்பினர்களை இழந்தவர்கள் ஆகியோருக்கு முதலில் ‘உளவியல் முதலுதவி’ தேவைப்படுகிறது. இந்த வேதனையுடன் அவர்கள் புதிய சவால்களை சந்திக்க தயங்குவார்கள். ஆகவே, உளவியல் முதலுதவி அளிப்பதன் மூலம், அவர்களின் ஆரம்பகட்ட மன உளைச்சலை தணிக்க முடியும் என்று செஞ்சிலுவை சங்கம் கருதுகிறது.

    மீண்டும் தாக்குதல் நடக்கக்கூடும் என்ற அச்சுறுத்தலும், பாதுகாப்பு சோதனையும், அவசரநிலை பிரகடனமும் மக்களிடையே பதற்றத்தையும், பீதியையும் ஏற்படுத்தி உள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.  #Easterattacks #SriLankaBlasts
    ஈஸ்டர் பண்டிகையையொட்டி சரத்குமார், ராமதாஸ் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். #easterday

    சென்னை:

    ஈஸ்டர் பண்டிகையையொட்டி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி:-

    நியாயமும், சத்தியமும், தியாகமும் என்றைக்கும் மரிப்பதில்லை என்பதை எடுத்துக்காட்டும் விதமாகவே இயேசுபிரானின் உயிர்த்தெழுதல் நிகழ்வு உலகளாவிய கிறிஸ்தவ பெருமக்களால் நம்பப்படுகிறது.

    இந்த ஈஸ்டர் நன்னாளில் நாட்டின் மத, இன, மொழி, வேறுபாடுகள் மறைந்து பகைவர்களுக்கும் அருளும் பண்பு மனிதர்களிடையே மிளிர்ந்து அனைவரும் அமைதி, சமாதானத்தோடும், மகிழ்ச்சியோடும் வாழ இயேசு கிறிஸ்துவின் போதனைகளை நெஞ்சில் உறுதியாக ஏற்போம்.

    சிறுபான்மையின மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, நாட்டில் உள்ள அனைத்து மக்களுக்கான வளமான வாழ்வை உருவாக்க இந்நாளில் உறுதியேற்போம். இறைவன் இயேசு கிறிஸ்து அனைவரது உள்ளங்களிலும் புதிய நம்பிக்கையையும், ஒளியையும் ஊட்டுவாராக.

    அனைத்து கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஈஸ்டர் தின நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்:-

    சிலுவையில் அறையப்பட்ட இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த திருநாளான ஈஸ்டர் பண்டிகையை கொண்டாடும் கிறித்துவ மக்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஒவ்வொன்றுக்கும் ஒரு காலமுண்டு; வானத்தின் கீழிருக்கிற ஒவ்வொரு காரியத்திற்கும் ஒவ்வொரு நேர முண்டு என்று எல்லாவற்றிற்கும் ஒரு காலம் குறித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற விவிலிய வாக்குதத்தின்படி குறித்து வைக்கப்பட்ட நேரத்தில், முக்கியமாக குறித்த காரியம் நடைபெற்றே தீர வேண்டும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் அருளப்பட்டிருக்கிறது. அதன்படி, மத்தியிலும், மாநிலத்திலும் நல்லாட்சிகள் தொடருவதற்கான தீர்ப்பை தமிழ்நாட்டு மக்கள் வாக்கு எந்திரங்களில் எழுதியிருக்கிறார்கள்.

    தீயவர்களால் சிலுவையில் அறையப்பட்டிருந்த இயேசு பிரான் உயிர்த்தெழுந்து வந்தது கிறித்தவர்களுக்கு எத்தகைய மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் அளித்ததோ, அதேபோன்ற ஆனந்தம் அடுத்த 33 நாட்களில் தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைக்கவிருக்கிறது. அந்த நாளில் தீயவர்கள் வீழ்வது உறுதியாகி விடும்.

    மனிதகுல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று, கொல்கதா எனப்படும் கபால ஸ்தலத்தில் ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நிகழ்ந்தது. நெஞ்சைப் பிளக்கும் அந்த சோக சம்பவம்தான், ரட்சகர் இயேசு பெருமான் சிலுவையில் அறையப்பட்ட அவலம் ஆகும்.

    ‘நான் உன்னை விட்டு விலகுவதும் இல்லை; உன்னைக் கைவிடுவதும் இல்லை ஒருவனின் தாய் அவனைத் தாங்குவது போல, நான் உன்னைத் தாங்குவேன்’ என்ற உறுதியைத் தரக்கூடிய இந்நாளில், மக்கள் இடையே சமய நல்லிணக்கமும், வாழ்வில் மறுமலர்ச்சியும் ஏற்படக்கூடிய வகையில் அமைந்திட, கிறித்துவப் பெருமக்களுக்கு ஈஸ்டர் திருநாள் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

    சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:-

    இயேசு பிரான் ஒரு சராசரி மனிதன் அனுபவிக்கும் துன்பங்களுக்கு மேலான துன்பங்களை அனுபவித்து, இறுதியில் தியாக சுடராக சிலுவையில் அறையப்பட்டு, மூன்றாம் நாள் மீண்டும் அவதரித்து வந்த நாளை, ஈஸ்டர் தினமாக கொண்டாடும் அனைத்து கிறிஸ்துவ சகோதர சகோதரிகளுக்கும் எனது நல்வாழ்த்துக்கள்.

    கிறிஸ்தவ முன்னேற்ற கழக தலைவர் ஜோசப் பெர்னாண்டோ:-

    இந்த உலகத்திற்கு தூய வாழ்க்கையின் முக்கியத்துவத்தை எடுத்துக் காட்டிய ஏசுபிரான் உயிர்த்த பெரு நாளில் கிறிஸ்தவ மக்கள் அனைவரும் குதூகலத் துடனும், வளமுடனும், வாழ்வாங்கு வாழ வாழ்த்துவதுடன் உன்னை நீ அன்பு செய்வது போல் பிறரையும் அன்பு செய் என்ற ஏசுவின் பொன்மொழிகளை கடை பிடித்து வாழ்வதுடன் நம் வாழ்வில் தியாகம், கருணை, சமத்துவம், சகோத ரத்துவம் ஆகிய நல்பழக்க வழக்கங்களை மேற்கொள்வோம். அனைவருக்கும் ஈஸ்டர் வாழ்த்துக்கள்.

    மேலும் பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலனும் ஈஸ்டர் வாழ்த்து தெரிவித்துள்ளார். #easterday

    பெரம்பலூர் மற்றும் அரியலூரில் குருத்தோலை ஏந்தி கிறிஸ்தவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
    அரியலூர்:

    கிறிஸ்தவர்களின் முக்கிய பண்டிகையில் ஒன்றான ஈஸ்டர் பண்டிகை வருகிற 21-ந் தேதி கொண்டாடப்படுகிறது. இதற்காக கிறிஸ்தவர்கள் விரதம் இருந்து 40 நாட்கள் பிரார்த்தனையில் ஈடுபடுவர். மேலும் ஈஸ்டருக்கு முந்தைய ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைபிடிக்கப்படுவது வழக்கம். அதுபோல் நேற்று குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது.

    இதையொட்டி பெரம்பலூரில் உள்ள புனித பனிமயமாதா திருத்தலத்தில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்தி பெரம்பலூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கிறிஸ்தவ பாடல்களை பாடிக்கொண்டு ஊர்வலமாக சென்றனர். அதனை தொடர்ந்து, ஆலயத்தில் குருத்தோலை சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இதேபோல் குன்னம், வேப்பந்தட்டை, பாடாலூர், மங்களமேடு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள தேவாலயங்களிலும் குருத்தோலை ஊர்வலம் நடைபெற்றது.

    இதேபோல் அரியலூரில் உள்ள சி.எஸ்.ஐ. மற்றும் ஆர்.சி. தேவாலயங்களில் குருத்தோலை ஞாயிறை முன்னிட்டு சிறப்பு திருப்பலி நடந்தது. முன்னதாக அரியலூர் நகராட்சி அலுவலகம் முன்பு இருந்து கிறிஸ்தவர்கள் குருத்தோலையை கையில் ஏந்திக்கொண்டு கிறிஸ்தவ பாடல்களை பாடியவாறு ஊர்வலமாக மார்க்கெட் தெரு, தேரடி, சத்திரம் வழியாக சென்று ஆலயத்தை வந்தடைந்தனர்.
    ×